மலையாளத்தின் பிரபல நடிகை மஞ்சு வாரியர் வெற்றிமாறனின் அசுரன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

1995 இல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சு வாரியர். அவர் பிறந்ததும் வளர்ந்ததும் தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தில். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 1998 இல் அவர் நடிகர் திலீபை மணந்து கொண்டார். அதன் பிறகு நடிப்பதை நிறுத்தினார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இரண்டாயிரத்தின் இறுதியில் திலீபுக்கும், மஞ்சு வாரியருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடங்கின. இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். அவர்களின் மகள் திலீபுடன் இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ரோஷன் ஆண்ட்ரூவின் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார் மஞ்சு வாரியர். அதன் பிறகு சத்தியன் அந்திக்காடு, ஆஷிக் அபு போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். தற்போது அவர் மலையாளத்தின் பிஸியான நடிகைகளில் ஒருவர்.

நடிக்க வந்து 25 ஆண்டுகள் நெருங்குகிற நேரத்தில் முதல்முறையாக தமிழில் மஞ்சு வாரியர் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் அவர் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here