ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட்-9 (GSAT-9) செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-9 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 4.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் வானிலை எச்சரிக்கை, பேரழிவு உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அறியே உதவும்.

இதையும் படியுங்கள் : பத்திரப் பதிவுக்கான புதிய விதிகள் என்ன? : 10 தகவல்கள்

1. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் 4வது ராக்கெட் இது

2. 12 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து விண்வெளியில் செயல்படும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது

3. 2,230 கிலோ எடை கொண்ட கொண்ட இந்த செயற்கைக்கோளின் மதிப்பு 235 கோடி ரூபாய்; மொத்தம் 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

4. இந்த செயற்கைக்கோள் மூலம், இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்

5. ஆஃப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்