வெறுப்பைப் போதித்த ஹெட்கேவாரை பிரணாப் பாராட்டலாமா?

Pranab praised Muslim hater Hedgewar

0
538
K.B.Hedgewar, the founder of RSS

ஜூன் 7 ஆம் தேதியன்று நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் உரை நிகழ்த்தினார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி; அந்த உரைக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரணாப். “இந்தியத் தாயின் பெரும் புதல்வனுக்கு அஞ்சலி” என்று பிரணாப் அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் எழுதினார். ஹெட்கேவார் எப்படிப்பட்ட முஸ்லிம் வெறுப்பைக் கடைபிடித்தார் என்பதைத் தெரிந்திருந்தால் பிரணாப் இப்படி எழுதியிருக்க மாட்டார்.

பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கேட்டு கேரளாவில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை ஹெட்கேவார் “வன்முறையாக”, “அராஜகமாக” சித்தரித்துள்ளார். கலவரங்களைத் தொடங்குவதே முஸ்லிம்கள்தான் என்று வெறுப்பைக் கக்கி எழுதியுள்ளார். நம்மை அடிமைப்படுத்தியுள்ள பிரிட்டிஷ் எதிரியல்ல; முஸ்லிம்கள்தான் எதிரி என்பதை தனது எழுத்துக்களில் திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்துள்ளார் ஹெட்கேவார். இவரை நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் அங்கீகரிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்தை விளைவிக்கும்.

நீங்கள் ஆர்.எஸ்.எஸ்சா? இதைப் படியுங்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்