வெறுப்பு பேச்சு மற்றும் வகுப்புவாத வன்முறைகள்; அரசின் ஆதரவு இருக்கிறது என்பதையே மோடியின் மௌனம் காட்டுகிறது

0
242

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் (திரிணமூல் காங்கிரஸ்) மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் (திமுக) ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஜார்க்கண்ட் முதல்வர் (ஜேஎம்எம்) ஹேமந்த் சோரன், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேபபத்ரா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் தலைவர் மனோஜ் பட்டாச்சார்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் குன்னாலிகுட்டி, கம்யூனிஸ்ட் (எம்எல்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் திபேந்தர் பட்டாச்சார்யா ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டடறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதவெறிப் பிரச்சாரம் செய்பவர்கள் மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் செயலால் நமது சமூகத்தைத் தூண்டிவிட்டு, ஆத்திரமூட்டுபவர்களுக்கு எதிராகப் பேசத் தவறிய பிரதமரின் மௌனம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவர்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது என்பதையே இந்த மௌனம் காட்டுகிறது” என்று எதிர்க்கட்சிகள் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையும்  படியுங்கள்👇

“பல நூற்றாண்டுகளாக நாட்டை வளப்படுத்திய” மத நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தங்கள் கூட்டு உறுதியை எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

“சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் நச்சு சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் எதிர்கொள்வதற்கும் நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

“அமைதியைப் பேணவும் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டுவோரின் தீய எண்ணங்களை முறியடிக்கவும் அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு நாடு முழுவதும் உள்ள எங்கள் கட்சி பிரிவுகள் அனைத்தையும் சுதந்திரமாகவும் கூட்டாகவும் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்”  என்று அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here