விஜய்- அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய் அப்பா- மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் படத்தின்
 வெறித்தனம் பாடலை படக்குழு 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது. விஜய் முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியுள்ளார் என்பதால் பாடல் மீதான எதிர்பார்பு எகிறியது.இப்பாடலை சென்னை வட்டார மொழியில் விஜய் பாடியுள்ளார்.  

இந்நிலையில் பாடல் வெளியானது முதலே யூடியூப்பில் சக்கை போடு போட்டு வருகிறது. வியூஸ், லைக்ஸ் என அனைத்திலும் சாதனை படைத்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது

தற்போது இந்த பாடல் 1 கோடி பார்வையாளர்களை கடந்து வெறித்தனமாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.மேலும் இந்தப் பாடலை இதுவரை 9,30,000 பேர்லைக் செய்துள்ளனர்.