மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வருகிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அயன் லேடி என்ற பெயரில் ப்ரியதர்ஷினி எடுத்து வருகிறார். நித்யாமேனன் இந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இயக்க உள்ளார். அதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகின்றன. இவர்கள் தவிர மூன்றாவது ஒரு குழுவும் ஜெயலலிதாவின் கதையை படமாக்க உள்ளது.

இந்நிலையில் இவர்கள் அனைவரையும் முந்திக் கொண்டு ஜெயலலிதாவின் கதையை வெப் சீரிஸாக எடுத்து வருகிறார் கௌதம். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், எம்.ஜி.ஆராக மலையாள நடிகர் இந்திரஜித்தும் நடிக்கின்றனர். ஜெயலலிதா வாழ்வில் நடந்த சர்ச்சைக்குரிய விஷயங்களையும் இந்த வெப் சீரிஸில் கௌதம் சொல்லவிருக்கிறாராம்.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்