உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று கூறி இருந்தார்.

இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் இணைத்து
“உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் 30,000 கோடி ரூபாயை திருடி அனில் அம்பானியிடம் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள்தான் ரஃபேல் விமான இந்தியாவுக்கு வர தாமதம் ஆனதற்கு காரணம். பழைய விமானங்களை ஓட்டி அபிநந்தன் போன்ற விமானிகளின் வாழ்வை ஆபத்தில் வைக்க நீங்கள்தான் காரணம்” என்று கடுமையாக விளாசி பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here