வெட்கக்கேடு… தமிழக அரசை விளாசிய நடிகர் சித்தார்த்

0
448
Siddharth

ஜெயலலிதா அரசு திரைத்துறையினருக்கு பல கடினமான தீர்மானங்களை முன்வைத்திருக்கிறது. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது அதில் ஒன்று. அப்போதெல்லாம் கெஞ்சினார்களே தவிர மிஞ்சவில்லை. இப்போது ஜெயலலிதா இல்லை. இருப்பது, இப்போதோ எப்போதோ என்று தள்ளாடும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு. எகிறி அடிக்கிறார்கள் நம்ம நட்சத்திரங்கள்.

ஜிஎஸ்டி விவகாரத்தில் பல விஷயங்களை மாநில அரசு தெளிவுப்படுத்தவில்லை. முக்கியமாக திரையரங்கு கட்டண விவகாரத்தில் எந்த வரியை கணக்கில் கொள்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. கேரள, ஆந்திர அரசுகள் மாநகராட்சி வரியை விலக்கி அவர்கள் மாநில திரைத்துறையை காப்பாற்றியிருக்கிறார்கள். இங்கு அரசை காப்பாற்ற முதலமைச்சர் போராடிக் கொண்டிருக்கிறார். அவரை எங்களை காப்பாற்றுங்கள் என்று திரைத்துறையினர் கேட்பது நியாயமில்லைதான்.

இது குறித்து சித்தார்த் ட்விட்டரில் காரசாரமாக பதிவிட்டுள்ளார்.

யு சான்றிதழ் வழங்குவதிலும், வரிச்சலுகை வழங்குவதிலும் உள்ள ஊழல் ஜிஎஸ்டியால் ஒழியும் என்பதே ஆறுதல். ஆனால், 30 சதவீத சேவை வரியும் இருக்குமென்றால் ஜிஎஸ்டி பெரும் தவறு.

ஜிஎஸ்டியும், சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படுமா இல்லை ஜிஎஸ்டி மட்டுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள். சேவை வரியும் இருக்குமென்றால் ஸ்டிரைக் செய்ய வேண்டியதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவை தமிழக அரசு பல ஆண்டுகளாக தண்டித்து வருகிறது. வரி விலக்கு வழங்குவதிலும் ஊழல் நடக்கிறது. இப்போது ஜிஎஸ்டியுடன் 30 சதவீத வரியா… வெட்கக்கேடு என்றிருக்கிறார்.

தமிழக அரசு வெட்கத்தை துறந்து நாளாகிறது… சித்தார்த்கிட்ட யாராவது சொல்லுங்கப்பா.

இதையும் படியுங்கள்: கதிராமங்கலம்: போராட்டக்காரர்கள் கைதைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்

இதையும் படியுங்கள்: புத்தகம் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி! தமிழக போலீசைக் கண்டிப்போம்!!

இதையும் பாருங்கள்: நந்தினி

இதையும் பாருங்கள்: சென்னை சில்க்ஸ் இப்போது எப்படி இருக்கிறது?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்