மழை சீசன் வந்துவிட்டது; இனிமேல் சூடாக ஏதாவது சாப்பிடவோ அருந்தவோ மனம் விரும்பும்.

திடீரென்று விருந்தாளிகள் வந்தாலும் செய்துகொடுக்கக் கூடிய எளிய வகை பலகாரம்; 10 அல்லது 15 நிமிடம் போதும்; எளிதில் செய்துவிடலாம்

நம்முடைய சவுத் இந்தியர்கள் வெங்காய பக்கோடா செய்யும்போது அதில் அரிசி மாவு,
கடலை மாவு சேர்ப்போம். ஆனால் வெளிநாட்டில் வெங்காயத்தை வட்டமாக வெட்டி மைதா மாவு, சோடா வாட்டர் கலந்து எண்ணெயில் பொரித்து எடுப்பார்கள். அதுவும் சாப்பிட மிக அருமையாக இருக்கும். தேனீருடன் சுவைக்க நன்றாக இருக்கும். குறிப்புகள் கீழே உங்களுக்காக:

தேவையான பொருட்கள் : பக்கோடா

நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயம் -2 கிண்ணம்
பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பெருங்காயப் பொடி – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
கடலை மாவு -1கிண்ணம்
அரிசி மாவு -1/4 கிண்ணம்
சமையல் சோடா – 1 சிட்டிகை
பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:

எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக தண்ணீர் விடாமல் பிசையவும். வெங்காயத்திலிருந்து வரும் தண்ணீரே போதுமானது. தளர வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்; சிறிது சிறிதாக எடுத்துப் போட்டு பொரித்து எடுக்கவும். தேநீருடன் சுவைக்கவும்

இரண்டாவது குறிப்பு: ரிங்க்ஸ்

வட்டமாக நறுக்கிய வெங்காயம் -2 கிண்ணம்
மைதா மாவு -1 கிண்ணம்
சோடா தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
மிளகுத் தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:

மைதா, எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மொறுமொறுப்பாக மிகவும் நன்றாக இருக்கும். தக்காளி சாஸுடன் சுவைக்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here