நாட்டில் வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் வெங்காய வரத்து நாடு முழுவதும் குறைந்துள்ளது. தமிழகத்துக்கு. 70 லாரிகளில் தினமும் கொண்டு வரப்படும் வெங்காயம், நேற்று வெறும் 30 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. ஆகவே வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாயை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் தட்டுப்பாடு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர்,  கூடுதல் அளவிலான வெங்காயத்தை சேமித்து வைக்கும் நவீன தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை எனக் கூறினார். அத்தகைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது, வியாபாரிகள் சேமித்து வைக்கும் அளவுக்கு கட்டுப்பாடு விதிப்பது, இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு விரைந்து கொண்டு சென்று சேர்ப்பது ஆகியவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று எம்.பி சுப்ரியா சூலே எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் அதிகமாக வெங்காயமோ அல்லது பூண்டோ சாப்பிடுவதில்லை. ஆகவே கவலை வேண்டாம். வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத ஒரு குடும்ப பழக்கத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்”என்று கூறினார்.

இவரின் இந்தக் கருத்து அவையில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது. அவரது இந்தக் கருத்திற்குநெட்டிசன்கள் பலரும் தமது எதிர்ப்பைப் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here