சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாகவும் வீராணம் ஏரி உள்ளது. கடந்த 10 நாட்களாக கீழணையில் இருந்து நீர்வரத்தை அதிகப்படுத்தி வீராணம் ஏரியில் தண்ணீர் அளவு உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், வீராணம் ஏரி முழுகொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் நீர்மட்டம் 47 புள்ளி 50 அடியை எட்டி உள்ளது.

கீழணையில் இருந்து, வீராணம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 483 கனஅடியாக உள்ளது.  சென்னையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 74 கனஅடியும், பாசனத்திற்காக 414 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்