வீரம் 2 படத்துக்கு அஜித் பச்சைக்கொடி…?

0
811
Ajith Kumar

வேதாளம், விவேகம் என்று அடுத்தடுத்து அதிரடி படங்களில் நடித்த அஜித் ரிலாக்ஸnக வீரம் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் முடிவை எடுத்திருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.

தயாரிப்பாளரும் சரி, இயக்குனரும் சரி… ஒருவரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களின் படங்களில் நடிப்பது அஜித்தின் வாடிக்கை. முன்பு நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, பிறகு ஏஎம் ரத்னம். இயக்குனர் என்றால் அஜித்தின் இப்போதைய பேவரைட் சிவா.

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து விவேகம் படத்தில் இந்த கூட்டணி ஹேட்ரிக் அடித்தது. அதுவும் வேதாளம் முடிந்த உடனே விவேகம் படத்தில் சிவாவுக்கு வாய்ப்பு அளித்தது ஆச்சரியம். இதெல்லாம் ஒண்ணுமேயில்லை என்பது போல் எனது அடுத்தப் படமும் சிவாவுக்கே என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித்.

விவேகத்தின் ஓபனிங் மிரட்டினாலும் பினிஷிங் சரியில்லை. பல இடங்களில் நஷ்டம் என்ற முணுமுணுப்பு கேட்கிறது. ஹை பட்ஜெட் படத்தை இனி சிவா எடுப்பது கஷ்டம். அதனால் வீரம் இரண்டாம் பாகத்தைஎடுக்கலாம் என்று அஜித் ஆலோசனை சொன்னதாக தகவல் உள்ளது.

இன்னும் சில வாரங்களில் முழுவிவரம் தெரிய வரும்.

இதையும் படியுங்கள்: Ippodhu, NWMI condemn death threats to journalists Meyyammai, Vidyashree Dharmaraj

இதையும் படியுங்கள்:‘எடப்பாடி பழனிசாமி அரசு ஒருபோதும் துணை போகக்கூடாது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்