ஸ்விகி நிறுவனம் வீட்டு சாப்பாடு விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு என்றே புதிதாகஸ்விகி டெய்லி’ (#SwiggyDaily) என்ற ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்விகி டெய்லி’ (#SwiggyDaily) என்ற இந்த புதிய செயலி வீட்டு சாப்பாட்டின் சுவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக நேற்று(திங்கள்கிழமை) ஹரியானாவின் குருகிராம் நகரில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த சில நாள்களில் இந்த சேவை பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு விரிவு செய்யப்படவுள்ளது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், சிறு வியாபாரிகள் எனப் பலருக்கும் இந்த செயலி வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் எனக் ஸ்விகி நிறுவனம் கூறியிருக்கிறது.

சப்ஸ்க்ரைப் செய்து உங்களுக்கு எந்த மாதிரியான சாப்பாடு வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஒரு நேரத்துக்கு என்றாலும் ஒரு மாதத்துக்கு என்றாலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்கான வீட்டுச் சாப்பாடு டெலிவரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here