வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்பட்டுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் பொருட்களை மாநில உணவுத்துறை மூலம் நேரடியாக சப்ளை செய்யும் புதிய திட்டத்திற்கு டெல்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்

ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டிலேயே சப்ளை செய்யும் திட்டதிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்கான அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்த்தே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில உணவுத் துறைக்கு இந்தத் திட்டத்தை உடனடியாக செய்லபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது . இதன் நடைமுறை தொடர்பாக தினமும் எனக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here