விஸ்வாசம் வெளியான கொஞ்ச நேரத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

விஸ்வாசம் பொங்கலுக்கு தனியாக வெளியாகும் என்ற நிலையில், திடீர் போட்டியாக பேட்ட குதித்தது. பேட்டயை போட்டியாகவே விஸ்வாசம் டீம் கருதியது. அஜித் ரசிகர்களும் அதற்கேற்ப கோதாவில் குதித்தனர். கட்அவுட் வைப்பது ரஜினி பேனரை கிழிப்பது, டிக்கெட்டுக்கு காசு தராத அப்பாவை எதிர்த்து தீக்குளித்தது என்று சூழலை டென்ஷனாக்கினர்.

விஸ்வாசத்தில் முதல் ஷோ முடிந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கினர். சரி, மாலை அணிவித்தது யார்? விஸ்வாசம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள். படத்தின் ஓபனிங் அபாரம் என்பதால் உடனடியாக படம் ஹிட் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு மாலை அணிவித்திருக்கிறார்கள்.

ஒருவாரம் கழிச்சு, படம் நஷ்டம் என்று கொடி பிடிக்காமல் இருந்தால் சரிதான்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்