விஸ்வாசம், பேட்ட படங்கள் தீபாவளிக்கு வெளிவருது உறுதியாகியுள்ளது. இதனால் இரு தரப்பும் முன் தயாரிப்பில் தீவிரமாக உள்ளன.

ரஜினி படம் வருகையில் பிற படங்கள் ஒதுங்கிக் கொள்வதுதான் வாடிக்கை. விஜய், அஜித் படங்கள் வரும் போதும் பிற படங்கள் ஒதுங்கிக் கொள்ளும். ஒரே படமே அதிக திரையரங்குகளை எடுத்துக் கொள்வதால் இந்த நிலை. வரும் பொங்கலுக்கு விஸ்வாசம், பேட்ட படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து எழுந்த முதல் கேள்வி, எந்தப் படத்துக்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கும்?

சர்கார் திரைப்படம் தமிழகத்தில் சுமார் 750 திரையரங்குகளில் வெளியானது. 2.0 க்கு அதைவிட அதிக திரையரங்குகள். விஸ்வாசம், பேட்ட படங்கள் தனித்தனியாக வெளியாகும்பட்சத்தில் இரு படங்களுக்கும் குறைந்தது 600 திரையரங்குகளாவது கிடைக்கும். ஒரேநேரத்தில் வெளியாகும் போது இரு படங்களுக்கும் அதிகபட்சம் 400 திரையரங்குகள் கிடைக்கலாம். இது இரு படங்களின் வசூலையும் பாதிக்கும்.

போட்டியை சமாளிக்க விஸ்வாசம் தயாரிப்பு தரப்பு இப்போதே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியை தொடங்கியிருக்கிறது. பேட்ட சன் பிக்சர்ஸ் படம் என்பதால் அவர்களும் அதிகபட்ச திரையரங்குகளுக்கு குறி வைத்திருக்கிறார்கள்.

இந்த போட்டியால் விநியோகஸ்தர்கள் தரப்பு மகிழ்ச்சியில் உள்ளது. யார் எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் இல்லாமல், சதவீத அடிப்படையில் படத்தை தர முன்வருகிறார்களோ, அவர்களது படத்தையே திரையிடுவோம் என டிமாண்ட் செய்து வருகின்றனர். பேட்ட, விஸ்வாசம் படங்கள் தனித்தனியே வெளியாகியிருந்தால் அவர்களால் இப்படி தைரியமாக டிமாண்ட் செய்ய முடியாது.

பொங்கல் இப்போதே கோடம்பாக்கத்தில் சூடாகத் தொடங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here