விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை கடும் போட்டிக்கிடையில் விற்கப்பட்டுள்ளது.

சிவா – அஜித் காம்பினேஷனில் நான்காவது படமாக தயாராகியிருக்கிறது விஸ்வாசம். வேதாளம், விவேகம் இப்போது விஸ்வாசம் என மூன்று படங்களை தொடர்ந்து சிவா இயக்கியிருக்கிறார். விவேகம் தோல்வியடைந்த பிறகும் இவர்கள் கூட்டணி மீதான எதிர்பார்ப்பு போகவில்லை. விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூப் பார்வைகள் மற்றும் லைக்குகளில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அஜித்தின் முந்தையப் படம் விவேகத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் டிவியே வாங்கியது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்