அஜித் படங்களில் விஸ்வாசம் புதிய சாதனை படைத்திருக்கிறது. யுஎஸ்ஸில் மட்டும் இந்தப் படம் சுமார் 106 திரையரங்குகளில் வெளியாகிறது.

விவேகம் சுமாராகப் போனாலும் அஜித் – சிவா கூட்டணியின் விஸ்வாசம் படத்துக்கு எதிர்பார்ப்பு குறையவில்லை. ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக இருக்கும் என்ற எண்ணத்தை படம் உருவாக்கியிருப்பது முக்கிய காரணம்.

விஸ்வாசத்துடன் பேட்ட வெளியாகிறது. அதனால் தமிழக அளவில் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் திரையரங்கு எண்ணிக்கையில் விஸ்வாசம் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்று முக்கியமான நேரடி தெலுங்குப் படங்கள் வெளியாவதால் விஸ்வாசம் நாளை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகவில்லை. இத்தனை பின்னடைவுகள் இருந்தும் யுஎஸ்ஸில் 106 திரையரங்குகளில் படம் வெளியாவதாக தயாhpப்பாளர் தரப்பு பட்டியல் வெளியிட்டுள்ளது. அஜித் படம் ஒன்று 100 திரையரங்குகளை கடந்து யுஎஸ்ஸில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

நாளை இந்நேரம் படத்தின் ரிசல்ட் தெரிய வந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here