விஸ்வரூபம் 2 படத்தின் சென்னை ஓபனிங் வசூல் சிறப்பாகவே இருந்தது. சுமார் 2.39 கோடிகளை முதல் மூன்று தினங்களில் விஸ்வரூபம் 2 சென்னையில் வசூலித்தது. இந்த வருடத்தின் மிகச்சிறந்த சென்னை வசூல் இதுவே. அதேநேரம் தமிழக அளவிலும், உலக அளவிலும் விஸ்வரூபம் 2 பின்தங்கியுள்ளது. மாஸ் நடிகர்களில் சென்னை ஓபனிங் வசூலில் எந்தப் படம் முன்னிலை என்பதைப் பார்ப்போம் (இங்கு 3 தினங்கள் என்பது வெள்ளி, சனி, ஞாயிறு நாள்களை குறிக்கிறது).

கபாலி – 3 தினங்கள் – 942 காட்சிகள் – 3.49 கோடிகள்

பாகுபலி 2 – 3 தினங்கள் – 828 காட்சிகள் – 3.24 கோடிகள்

விவேகம் – 3 தினங்கள் – 870 காட்சிகள் – 3.98 கோடிகள் (வியாழனையும் சேர்த்து 5.22 கோடிகள்)

மெர்சல் – 3 தினங்கள் – 678 காட்சிகள் – 3.90 கோடிகள் (புதன், வியாழனையும் சேர்த்தால் 6.86 கோடிகள்)

வேலைக்காரன் – 3 தினங்கள் – 414 காட்சிகள் – 2.71 கோடிகள்

காலா – 3 தினங்கள் – 765 காட்சிகள் – 4.26 கோடிகள் (வியாழனையும் சேர்த்தால் 6.70 கோடிகள்)

தானா சேர்ந்த கூட்டம் – 3 தினங்கள் – 2.38 கோடிகள்

விஸ்வரூபம் 2 – 3 தினங்கள் – 435 காட்சிகள் – 2.39 கோடிகள்

இந்தப் பட்டியலில் தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தவிர மற்ற அனைத்துப் படங்களும் விஸ்வரூபம் 2 படத்தைவிட அதிக ஓபனிங்கை பெற்றிருப்பதை பார்க்கலாம். அதேநேரம் பிற படங்களின் 3 நாள் காட்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

வெளிநாடுகளில் விஸ்வரூபம் 2 படத்தின் ஓபனிங் வசூல் குறித்த சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. யுஎஸ்ஸில் 3 கோடிகளுக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. பிற முன்னணி நடிகர்களின் படங்களின் யுஎஸ் வசூல் விவரம்.

யுஎஸ்

2010 – எந்திரன் – 6.81 கோடிகள் (மூன்று தினங்கள்)

2015 – ஐ – 4.30 கோடிகள் (மூன்று தினங்கள்)

2016 – கபாலி (தமிழ், தெலுங்கு) – 24.33 கோடிகள் (மூன்று தினங்கள்)

2017 – மெர்சல் – 7.13 கோடிகள் (ஐந்து தினங்கள்)

2017 – விவேகம் – 2.88 கோடிகள் (மூன்று தினங்கள்)

2018 – காலா – 12.36 கோடிகள் (நான்கு தினங்கள்)

2018 – விஸ்வரூபம் 2 – சுமாராக 3 கோடிகள் (3 தினங்கள்)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸிலும் விஸ்வரூபம் 2 படத்தின் ஓபனிங் வசூல் பிற படங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

முதல்வாரத்திலேயே விஸ்வரூபம் 2 பல திரையரங்குளிலிருந்து தூக்கப்பட்ட நிலையில், குறைவான வசூலையே படம் பெறும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here