நேற்று மாலை கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் தமிழ், இந்தி, தெலுங்கு பதிப்புகளின் ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன. இதனை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டிய கமல், அவர்கள் மத்தியில் பேசினார்.

“விஸ்வரூபம் 2 படம் உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. அமெரிக்காவில் ஒரு ஹாலிவுட் படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகுமோ அதே எண்ணிக்கையிலான திரையரங்குகளில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடுகிறோம். ஒரு இந்திய படம் ஹாலிவுட் படத்துக்கு இணையாக வருவது பெரிய விஷயம்” என்றார்.

“விஸ்வரூபம் 2 படத்துக்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். விஸ்வரூபத்துக்கு வந்த எதிர்ப்பு, அரசியல் என்ற பெயரில் வராமல் வேறு பெயரில் உருமாறி வந்த எதிர்ப்பு. ஒருவேளை விஸ்வரூபம் 2 படத்துக்கு எதிர்ப்பு வந்தால் அதனை எதிர்கொள்ள ஒரு அரசியல்வாதியாக இப்போது நான் தயாராகிவிட்டேன்” என்றார்.

விஸ்வரூபம் படம் எதிர்ப்பின் காரணமாகவே அதிகம் பேசப்பட்டது, பார்க்கப்பட்டது. அதேபோல் விஸ்வரூம் 2 படமும் பேசப்பட, பார்க்கப்பட வேண்டும் என நினைக்கிறார். அதனால், நானும் ரவுடிதான் பாணியில் வான்டடாக வண்டியில் ஏறியிருக்கிறார் கமல். அவரது பேச்சைப் பார்த்தால், வாங்க… வாங்க… பிரச்சனை பண்ண வாங்க… என்று அழைப்பது போலவே உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்