விஸ்வரூபம் 2 படம் வெளியாகும் அதேநாளில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் வெளியாகிறது.

விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடுவதாக கமல் அறிவித்திருந்தார். கமல் படம் வெளிவரும் நாளில் மற்றப் படங்கள் ஒதுங்கிக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது. கமல் படம் வெளிவந்தாலும் பிற படங்கள் பயப்படுவதில்லை. கமல் படம்தானே என்று தங்கள் படத்தையும் அதனுடன் வெளியிடுகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தை விஸ்வரூபம் 2 வெளியாகும் அதே ஆகஸ்ட் 10 வெளியிடுவதாக படத்தை தயாரித்திருக்கும் லைகா அறிவித்துள்ளது. கோகோ படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். யோகி பாபு நயன்தாராவை புரப்போஸ் செய்யும் பாடல் ஏற்கனவே ஹிட்டாகியுள்ள நிலையில் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசை என்பது கோகோ படத்தின் கூடுதல் பலம்.

விஸ்வரூபம் 2 படத்துக்கு கோலமாவு கோகிலா கடும் போட்டியாக இருக்கப் போகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்