விஷ்ணு விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற ‘ராட்சசன்’ பக்கத்தில் படத்தின் VFX BREAKDOWN வீடியோவை இயக்குநர் ராம்குமார் தனது ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால் நடித்து இந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் வெளியான படம் ‘ராட்சசன்’. ராம்குமார் இயக்கியிருந்த இதில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். ‘கிரிஸ்டோபர்’ எனும் வில்லன் வேடத்தில் சரவணன் நடித்திருந்தார்.

ஜிப்ரான் இசையில், பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார். சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

சமீபத்தில், இப்படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ வாங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here