நடிகர் விஷ்ணு விஷால் 2018ம் ஆண்டு தனது மனைவியான ரஜினியை விவாகரத்து செய்தார்.

விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம்தான் அவர்கள் இருவரும் பிரிந்து சென்றதற்கான காரணம்  என்று கூறப்பட்டது. ஆனால் இதை மறுத்த விஷ்ணு விஷால், ஜுவாலா தனது தோழி மட்டுமே என்று கூறினார்.

இந்நிலையில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்த ஜுவாலா கட்டா தான் விஷ்ணு விஷாலுடன் நெருக்குமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த டிவீட்டில் அவர் விஷ்ணு விஷாலை பேபி என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம்   புத்தாண்டை விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து கொண்டாட ஜுவாலா ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தது தெரிய வந்துள்ளது.

முன்னதாக விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா பற்றி கூறிப்பிடும்போது, எனக்கு அவரை ஓராண்டாக தெரியும். எங்களுக்கு நிறைய பொதுவான நண்பர்கள் உள்ளனர். எங்களுக்கு ஒருவரையொருவர் பிடிக்கும். அது தவிர்த்து வேறு எதுவும் தற்போதைக்கு கூற முடியாது. வேலை இருப்பதால் காதல் பற்றி பேச நேரம் இல்லை என்ற கூறினார்.

இந்நிலையில் வெளியானதுதான் ஜுவாலா கட்டாவின் டிவீட் பதிவு. இந்த டிவீட் மூலம் தனது காதலை உலககிற்கே அறிவித்து விட்டார் அவர்.

முன்னதாக விஷ்ணு விஷால்  அமலாபாலுடன் நெருக்குவதாக ஒரு தகவல் வலைத்தளங்களில் வலம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here