விஷால் நடித்த ‘சக்ரா’ படம் வெளியிட இடைக்காலத் தடை

0
269

சக்ரா படத்தை வெளியிட தடை கோரி படத்தயாரிப்பாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து, விஷால், இயக்குனர் ஆனந்த் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னிடம் சக்ரா படத்தின் கதையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துவிட்டு தற்போது விஷால் தயாரிப்பில் அவர் நடிப்பில் இந்த படம் உருவாக்கி உள்ளது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் ரவீந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனையேற்ற நீதிபதி கார்த்திகேயன், சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு குறித்து நடிகர் விஷால், படத்தின் இயக்குனர் ஆனந்த் ஆகியோர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here