இன்று ஹைதராபாத்தில் நடிகர் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகர் விஷால் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளும், நடிகையுமான அனிஷாவை காதலித்து வந்தார். விரைவில் அவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் முறைப்படி அறிவித்தார். இரண்டு பேரும் இணைந்திருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

இன்று (மார்ச் 16) ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டிய பிறகு அதில் வைத்து என்னுடைய திருமணம் நடைபெறும் என விஷால் முன்பு அறிவித்திருந்தார். கட்டடம் இன்னும் முழுமையடையாததால் இன்று திருமண தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here