விஷாலுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்த இயக்குனர் சேரன்

0
257
Vishal

திடீர் அரசியல்வாதி விஷாலுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறார் இயக்குனர் சேரன்.

சில நூறுபேர் கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தலைவர் ஆனதால் தமிழகத்துக்கே தலைவராகலாம் என்ற எண்ணம் விஷாலுக்கு ஏற்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஆர்.கே.நகரில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக வேட்பாளரானதாக விஷால் கூறியுள்ளார். இதே காரணத்தை முன்வைத்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் போட்டியிட்டவர் அங்கு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தினார் என்பது சங்க உறுப்பினர்களுக்கே வெளிச்சம்.

விஷாலின் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுக்கு சேரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இரண்டு சங்கங்களில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டே அரசியலில் இறங்கியிருக்கும் அவரை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

“முதல் களமிறங்கும்போதே பொய்முகத்தோடு நோக்கமேயின்றி யாரோட தூண்டுதலாலோ நிற்பதிலிருந்து வியாபாரக் குதிரை ஆகிவிட்டார் விஷால்.

நடிகர் சங்கத்தில் ஜெயித்தவுடன் முதலில் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிய விஷால் நாளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரை வணங்கி மனுதாக்கல். ஏன் ? ? ?

விஷாலின் இந்த முடிவால் நடுத்தெருவில் நிற்கப்போவது தயாரிப்பாளர்கள். இனிவரும் எந்த அரசிடமிருந்தும் எதுவும் கிடைக்கப் போவதில்லை. மொத்தமாக தலையில் துண்டு.

தயாரிப்பாளர் நலன்கருதி விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்பதே நல்லது. இல்லையெனில் நிறைய அசோக்குமார்களை சங்கம் சந்திக்கும்.

இதை கருத்தில் எடுக்காமல் நாளை அவர் மனுதாக்கல் செய்தால் நாளை மறுநாள் முதல் நான் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவேன். தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யும்வரை.”

– இவ்வாறு சேரன் பதிவிட்டுள்ளார். இரண்டு தினங்கள் முன்புதான், இனி அரசியல் பதிவு போட மாட்டேன் ஞானம் பிறந்தது என்று சேரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : சொகுசு கார் வழக்கு: நடராஜனுக்கு விலக்களித்தது உச்சநீதிமன்றம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்