விஷாலின் இரும்புத்திரை படத்துக்கு பாஜக எதிர்ப்பு – சென்னையில் காட்சிகள் ரத்து

0
415

இன்று வெளியாகியிருக்கும் விஷாலின் இரும்புத்திரை படத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் சென்னை காசி திரையரங்கில் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விஷாலின் இரும்புத்திரை சைபர் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஆதார் கார்ட் உள்ளிட்ட விஷயங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. 500 ரூபாய் கொடுத்தால் ஆதார் விவரங்கள் கிடைக்கும் என்பது போன்ற வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இவை கற்பனையானவை அல்ல. நடைமுறையில் அரசியல் கட்சிகளால், சமூக ஆர்வலர்களால், பொதுமக்களால் பேசப்பட்டவை, விவாதிக்கப்பட்டவை. கர்நாடக தேர்தலையொட்டி பாஜக பிரமுகரின் வீட்டில் ஒரிஜினல் அடையாள அட்டைகள் நுhற்றுக்கணக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டிக்காத பாஜகவினர், விமர்சித்தால் மட்டும் கம்பு சுற்றுவது வேடிக்கை.

இரும்புத்திரை படத்திலிருந்து மத்திய அரசை விமர்சிக்கும் காட்சிகளை அகற்ற வேண்டும் என சென்னை காசி திரையரங்கின் முன் பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர். தணிக்கைச்சான்று பெற்ற ஒரு படத்தை திரையிடக் கூடாது என்பதும், காட்சிகளை அகற்றக்கோருவதும் ஒருவரது உரிமை என்றாலும், காட்சிகளை அனுமதிக்காமல் போராட்டம் நடத்துவது அராஜகம். மாநில அரசின் போலீஸ் இரண்டு நிமிடம் லத்திச்சார்ஜ் செய்து முடித்திருக்க வேண்டிய விஷயம், அவர்களின் அலட்சியத்தால், காசி திரையரங்கு நிர்வாகம் இரண்டு காட்சிகளை ரத்து செய்யும் அளவுக்குப் போனது. பாஜகவினாpன் இந்த அராஜகம் கண்டிக்கப்பட வேண்டியது.

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்