விஷாலின் அயோக்யா படத்துக்கு போட்டியாக வருகிறது காஞ்சனா 3 திரைப்படம்.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா படமே தமிழின் முதல் வெற்றிகரமான சீரிஸ் எனலாம். ஒவ்வொன்றும் ஒரு கதை என்பதால் இதனை சீரிஸ் என்று சொல்வது பாதியளவே ஏற்புடையது. நாயகன், காமெடி நட்சத்திரங்கள் மாறுவதில்லை. அதேபோல் அனைத்துமே பேய்க்கதைகள்.

காஞ்சனா 2 தமிழில் 100 கோடிக்கு அதிகமாக வசூலித்த சொற்ப படங்களில் ஒன்று. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் இரு மொழிகளிலும் வெற்றி பெற்றது. காஞ்சனா 3 இல் லாரன்ஸ், வேதிகா, ஓவியா நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸுடன் இணைந்து லாரன்ஸ் தயாரித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. மே மாதம் படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இப்போது அதில் மாற்றம்.

ஏப்ரல் 18 தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதனால் ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு முன் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க அரசுத்தரப்பு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 12 க்கு மேல் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துவிடும்.

தேர்தலும் 18 ஆம் தேதியோடு முடிவடையும். இதனால் ஏப்ரல் 19 காஞ்சனா 3 படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். அன்றுதான் விஷாலின் அயோக்யா படமும் திரைக்கு வருகிறது. காஞ்சனா 3 ஐ வெளியிடுவது சன் பிக்சர்ஸ் என்பதால் அதிக திரையரங்குகளை அவர்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், முனி, காஞ்சனா 2 படங்களின் வெற்றி காரணமாக காஞ்சனா 3 படத்தை வாங்கவே விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இது அயோக்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here