விவோ நிறுவனம், விவோ வி15 ப்ரோ(VivoV15Pro) இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டிஸ்சரில் விவோவின் இந்த புதிய தயாரிப்பு உலகத்தின் முதல் 32 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபியை கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் அந்த வீடியோவில் போனின் பின்புறத்தில் அமைந்திருக்கும் மூன்று கேமராக்களும் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) கொண்டு இயங்குவதுபோல் அமைந்திருக்கிறது.

18 வினாடி அறிமுக டீசரில் விவோ நிறுவனம், தனது பிராண்ட் அம்பசிடரான அமீர்கானை வைத்து இந்த புதிய தயாரிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஏற்கனவே பாப் ஆப் செல்ஃபி கேமரா பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த போன் ரூ.25,990 க்கு சந்தையில் விற்பனை வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
நீல நிறத்தில் இருக்கும் இந்த புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன், கிரேடியன்ட் ஃப்னிஷிங்கை கொண்டுள்ளது. வரும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்