விவோ நிறுவனம் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மாடல் விவோ நெக்ஸ்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் மாடலை கடந்த நேற்று(வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் விவோ நெக்ஸ் எஸ் மாடலின் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

vivo-NEX

விவோ நெக்ஸ், பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. X21ல் இருப்பது போன்று, ஆன் – ஸ்கிரீனில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், பாப் – அப் கேமரா கொண்டுள்ளது.

1500-App_17._CB473430920_

விவோ நெக்ஸ் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்டு, ஃபன் டச் ஓ.எஸ் v4.0 மூலம் இயங்குகிறது.

1500-App_04._CB473402901_

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு நானோ சிம்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். 6.59 இஞ்ச் சூப்பர் அமோல்டு டிஸ்பிளே, முழு ஹெச்.டி மற்றும் 91.2% ஸ்கிரீன் டூ பாடி விகிதாச்சாரம் கொண்டுள்ளது. குவால்கம் 845 பிராசசர், 8 ஜிபி ரேம், அட்ரினோ 630 GPU பெற்றுள்ளது.

Vivo-NEX-S-elevating-camera-1

8 எம்பி செல்பி கேமரா உடன் f/2.0 அபெர்ச்சர், 12 எம்பி + 5 எம்பி இரட்டை பின்பக்க கேமரா உடன் f/1.8 அபெர்ச்சர் மற்றும் f/2.4 அபெர்ச்சர் இருக்கிறது. இந்த மாடலில் 128 ஜிபி உள்ளடக்க மெமரி உள்ளது.

இந்த போன் வரும் ஜூலை 21ம் தேதி முதல், அமேசான், விவோ இந்தியா ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
விவோ நெக்ஸ்சின் விலை ரூபாய் 44,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்