விவோ நிறுவனத்தின் புதிய மாடலான ‘நெக்ஸ் 2’ ஸ்மார்ட்போன் இரண்டு டிஸ்ப்ளேகளுடன் வெளியாகவுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அதிகவேகமாக சென்றுகொண்டிருக்கிறது. மற்ற நவீன சாதனங்களுடன் ஒப்பிடுகையில் செல்போன் என்பது இதில் இமாலய வளர்ச்சி பெற்று வருகிறது. ஒரு மனிதனை ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் முடக்கிப்போடுவதற்கு ஒரு ஸ்மார்ட்போன் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்களின் நேரத்தை ஸ்மார்ட்போன்களும், கேம்களும் 80% எடுத்துக்கொள்கின்றன.”

ஸ்மார்ட்போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதன் வியாபார போட்டிகளும் அதிகரித்துள்ளன. இதனால் ஒவ்வொரு நிறுவனமும் நவீன வசதி கொண்ட புதிய ரக ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்த வெளியிடுகின்றன. அந்த வகையில் சீன நிறுவனமான விவோ தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்த மாத இறுதியில் வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டீஸர், தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருக்கும் தகவல்களின்படி, இந்த போன் இரண்டு டிஸ்ப்ளேக்களை கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

ஒரு டிஸ்ப்ளே கீழ்ப்பகுதியில் லோகோ டச் கொண்டதாக உள்ளது. மற்றொரு டிஸ்ப்ளே முழு டச் உடன், ஃபிங்கர் ஸ்கேன்னர் கொண்டதாக உள்ளது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரக்காளை கொண்டுள்ளது. அத்துடன் இருட்டிலும் துல்லியமாக போட்டோ எடுக்கும் தொழில்நுட்ப வசதி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை சுமார் ரூ.35,000 மதிப்பில் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்