விவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

புதிய விவோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் 10 என்.எம். ஃபின்ஃபெட் வழிமுறையில் உருவாக்கப்பட்டதாகும். 

மேலும் பப்ஜி மொபைல் கிளப் ஓபன் 2019 இன் அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்போனாக புதிய விவோ இசட்1 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது.

இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள புதிய பிராசஸர், ஆக்டா-கோர் க்ரியோ 360 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 616 ஜி.பி.யு. கிராஃபிக்ஸ் மூலம் 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மேலும் ஸ்னாப்டிராகன் எக்ஸ்15 எல்.டி.இ. கொண்டிருப்பதால், அதிகபட்சம் நொடிக்கு 800 எம்.பி. (800 Mbps) வேகத்தில் தரவுகளை டவுன்லோடு செய்ய முடியும். இத்துடன் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே சப்போர்ட் மற்றும் பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) என்ஜின் வழங்கப்படுகிறது.

இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. இன்-டிஸ்ப்ளே கேமரா, இதுதவிர விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள், இதன் வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என விவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here