விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

0
289

நடிகர் விவேக் மறைவையொட்டி நடிகர் விஜய் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 16 ஆம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். விவேக் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.நடிகர் விவேக் முன்னணி நடிகரான விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ளார்.இறுதியாக விவேக் விஜயுடன் இணைந்து மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்திற்காக நடிகர் விஐய் மற்றும் படக்குழு ஜார்ஜியாவிற்கு சென்றுவிட்டது. இதனால் நடிகர் விஜய் , விவேக் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை சந்தித்து நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அங்கிருந்த விவேக் திருவுருவ படத்திற்கு மலர்த்துவி மரியாதை செலுத்திய அவர், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார். கடந்த சில வாரங்களாக ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் , தற்போது சென்னை திரும்பிய நிலையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here