விவேகம், தானா சேர்ந்த கூட்டம் டீஸர் சாதனையை முறியடிக்காத காலா

0
139
Rajinikanth

ரஜினியின் காலா டீஸர் இன்னும் விவேகம், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் டீஸர் சாதனையையே முறியடிக்கவில்லை.

பொதுவாக ரஜினி படங்களின் டீஸர், ட்ரெய்லர் எப்போது வெளியானாலும் சாதனைகள் படைக்கும். கபாலி அப்படித்தான் செய்தது. ஆனால், காலா டீஸர் இதுவரை சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தின் சாதனையையே நெருங்கவில்லை.

கபாலி டீஸர் 4.7 லட்சம் லைக்குகளை பெற்றிருந்தது. காலா 4.74 லட்சம் லைக்குகளுடன் கபாலியை முந்தியிருக்கிறது. அதேநேரம், விவேகம், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் லைக்குகளை எட்ட இன்னும் பல லட்சங்கள் காலாவுக்கு தேவைப்படுகிறது.

காலா வெளியாவதற்குள் மேலே சொன்ன படங்களின் சாதனையை காலா தொட்டுவிடலாம். எனினும் விஜய்யின் மெர்சல் டீஸரின் 10 லட்சம் லைக்குகள் சாதனையை காலாவால் எட்ட முடியுமா என்பது சந்தேகமே.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இதையும் படியுங்கள்: அருண்ஜேட்லியின் மகள் அலுவலகத்தில் சோதனை நடத்தாது ஏன்?’

இதையும் படியுங்கள்: விவசாயி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்