விவேகத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கும் விஐபி

0
92
Ajith Kumar

வேலையில்லா பட்டதாரி 2 படத்தை ஜுலை 28 தனுஷின் பிறந்தநாளில் வெளியிடுவதாகச் சொன்னவர்கள் ஆகஸ்ட் மாதத்துக்கு ரிலீஸை தள்ளி வைத்தனர். தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்த பின்பும் ரிலீஸ் தேதியை ஏன் அறிவிக்கவில்லை?

அஜித்தின் விவேகம்தான் காரணம். விவேகம் வெளிவந்தால் தமிழகத்தில் உள்ள நல்ல திரையரங்குகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும். அதனால் விவேகம் வெளியாகி இரண்டுவாரம் இடைவெளிவிட்டு பாதுகாப்பாக விஐபி 2 வை வெளியிடலாம் என்று யோசிக்கிறார்கள். ஆனால், விவேகம் படம் இன்றுதான் தணிக்கைக்குப் போகிறது. படத்துக்கு கிடைக்கும் சான்றிதழைப் பொறுத்து ரிலீஸ் தேதியை விவேகம் டீம் அறிவிக்க உள்ளது.

ஆகஸ்ட் 10 விவேகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கையில் யு அல்லது யு/ஏ கிடைத்தால் ஆக்ஸ்ட் 10 படம் கண்டிப்பாக வெளியாகும். ஏ கிடைத்தால் ரிவைஸிங் கமிட்டிக்கு படத்தை அனுப்புவார்கள். படம் தள்ளிப் போகும் என்கிறது படக்குழு.

ஆக, விவேகத்தின் ரிலீஸ் தேதி இன்றைய தணிக்கைக்குழு தரும் சான்றிதழே முடிவு செய்யும்.

இதையும் பாருங்கள்: அடக்க அடக்க மக்கள் திமிறி எழுவார்கள்”

இதையும் பாருங்கள்: எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்