விவசாயி

அலட்சியத்துக்கு எதிரான அணிவகுப்பு இது

0
481

விவசாயம்தான் சோறு போடும்; விவசாயம்தான் வேலைகளை உருவாக்கும்; உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்துமே முதன்மைப் பணியாக, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தன. விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதற்காக மானியங்களை அள்ளி வழங்கி வருகின்றன. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்த நாடுகள்தான் வல்லரசுகளாக உயர்ந்துள்ளன. இந்தியாவில் மோடி அரசு உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறது. நிலத்தின் விவசாயிகளையும் கடலின் விவசாயிகளையும் (மீனவர்கள்) சக மனிதர்களாக மதிக்காமல் தீண்டாமையைக் கடைபிடிக்கிறது. இந்தத் தீண்டாமைக்கு எதிராக மும்பையில் பெரும் திரளாக மக்கள் ஒன்று திரண்டிருக்கிறார்கள். கவிஞர் பாப்லோ நெருடா சொன்னதுபோல, “நீங்கள் எல்லா பூக்களையும் நசுக்கலாம்; ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது” என்பதை மோடிக்கு உரக்கச் சொன்ன மக்களின் அணிவகுப்பு இது.

ஒக்கி புயல்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்