விவசாயிகளிடம் ஜிஎஸ்டியாக ரூ15000 கோடி பிடுங்கும் மோடி அரசு; எப்படின்னு தெரிஞ்சிக்க இதைப் படிங்க

0
376

விவசாயி விளைவித்த பொருள்களுக்கு 0% ஜிஎஸ்டிதான் . ஆனால் நம் நாட்டின் விவசாயிகள் வருடத்திற்கு ரூ15000 கோடி ஜிஎஸ்டியாக  செலுத்துகின்றனர். 

விவசாயம் தனித்துவமானது, அதிக உற்பத்தி இருந்தாலும் விலையில் நிச்சயமற்றதன்மைக் கொண்டது விவசாயம்.   விவசாயத்தில்தான் சில்லறையாக வாங்கப்படும் பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. 

விவசாயம் என்ற தொழிலில் மட்டும் தாங்கள் வாங்கிய மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரியை (input tax credit)  திரும்ப பெற இயலாது. ஜிஎஸ்டி செலுத்தும் பிற தொழில் செய்வோர் தாங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி செலுத்துவார்கள். அதே போல தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கும் அதற்கான ஜி.எஸ்.டி யை பெற்றுக் கொள்வார்கள்.   

விவசாய விளைபொருளுக்கு வரிவிலக்கு அளித்திருக்கிறது  மத்திய அரசு.  விவசாயிகள் பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 15,000 கோடி அவர்கள்  வரியாகக் கட்டுகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த தெற்காசிய உயிரிதொழில்நுட்ப மையத்தின் நிறுவன இயக்குனர் பகிரத் சௌத்ரி விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவரே  விரிவாகக் கூறுகிறார். பயிர்களை அழிக்கும் அந்துப் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் கருவியின் பெயர் “பெரொமோன் ட்ராப்” (Pheromone Trap). இது அந்துப் பூச்சுகளில் ஆண் இனத்தை ஈர்க்க பெண் இனம் வெளியிடும் வாசனையை செயற்கையாக உருவாக்கும்  கருவி. இந்த வாசனையை வைத்து இதனை நோக்கி வரும் ஆண்பூச்சிகள் இந்த பொறியில் சிக்கிவிடும். இந்தப் பொறியை வாங்கும் விவசாயி  ஜி.எஸ்.டி யாக 18 சதவீதத்தை கொடுக்கிறார். 

இதற்கு மட்டும் 18 சதவீதம் ஜிஎஸ்டி இல்லை. இவ்வாறு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்களான, கண்கண்ணாடி, கையுறை, முகமூடி ஆகியவற்றிற்கும், உரம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவைக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது.

தாவரவியல் மற்றும்  உயிரியல் பூச்சிக் கொல்லிகளுக்கும் (Azadirachtin, Nomuraea rileyi, Metarhizium anisopliae and nuclear polyhedrosis virus formulations)   குறைந்தபட்சமாக 5% முதல்  12% வரை விதிக்கப்படுகிறது.

50  ஈர்ப்பு பொறிகள் 50 மற்றும் அதற்கான வாசனைகிளப்பிகளின் நான் வாங்கும் போது அதன் விலை ரூ.2540  அதற்கான  ஜி.எஸ்.டி மட்டும் ரூ.387.46. விவசாய பொருட்களின் விலையும் அதற்கான ஜிஎஸ்டியும் என் ஆர்வத்தை அதிகபடுத்தவே அதைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள விரும்பினேன் என்று பகிரத் சௌத்ரி கூறுகிறார். 


 விதைகள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் ஆகியவற்றைத் தவிர விவசாயத்துக்கான பிற மூலப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் வரி விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் மானியம் அளிக்கப்படும் உரங்களுக்கும் 5% ஜி.எஸ்.டி  விதிக்கப்படுகிறது என்று கூறுகிறார் ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் விவசாயியின் மகனான பகிரத் சௌத்ரி . 

  

விவசாயி தாங்கள் வாங்கிய மூல பொருட்களுக்கு ஜிஎஸ்டி கொடுத்திருப்பார்கள். அந்தத் தொகையை விவசாயியால்  மீண்டும் பெற இயலாது. அதாவது விளைவிக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது . 

பொருட்களை வங்கிய தொகைக்கும் விற்ற தொகைக்கும் உள்ள வேறுபாட்டுத் தொகையை ஆடிட்டர் மூலமாக ஜி.எஸ்.டி கணக்கை முடித்து முறையாக அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது  விவசாயிக்கு சாத்தியப்படாது . 

ஒரு விவசாயி, பயிர் வைப்பதற்கு போட்ட மூலதனத்தை திரும்ப எடுப்பதற்கே வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும் போது , எப்படி ஒரு விவசாயியால் ஆடிட்டருக்கு செலவழிக்க முடியும்?

 2018 – 2019-ஆம் ஆண்டில்  சுமார் 16,628 கோடி ( பூச்சிக்கொல்ல்லிகள் – ரூ8273 கோடி + காளான் கொல்லி ரூ4464 கோடி + களைக்கொல்லிகள் ரூ3891 கோடி ) மதிப்பிலான விவசாயத்துக்கான ரசாயன பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதற்கு மட்டும் சராசரியாக 18% ஜி.எஸ்.டி என்று கணக்கிட்டால், சுமார் ரூ. 2,356 கோடி தொகையை ஜி.எஸ்.டி வரியாக விவசாயிகளிடம் பெறுகிறது அரசு. 

2018-19 இல் ரூ75000 கோடிக்கு உரம் விற்றுள்ளது. உரத்துக்கான ஜிஎஸ்டி 5 சதவீதம் . உரம் விற்பனையின் மூலம் அரசுக்கு கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ3750 கோடி.  டிராக்டர்கள் ரூ42000 கோடிக்கு விற்றுள்ளது . இதற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி அதனால் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ4500 கோடி. 

மொத்தத்தில், டிராக்டர், மோட்டார் பம்ப் தொடங்கி ரசாயன மருந்துகள் வரை அனைத்து விவசாயப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி சராசரியாக ரூ.15,000 கோடியாக இருக்கிறது என்கிறார் பகிரத் சௌத்ரி. 

சிறு தொழிலை அழிப்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி, விவாயிகளின் கடன் சுமையை அதிகரிக்கிறது. அரசு விவசாய மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டியை விலக்க வேண்டும் என்கிறார் பகிரத் சௌத்ரி . 

https://indianexpress.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here