மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் சமீபத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்றபோது, பிரதமர் மோடி மிகவும் திமிராக பேசினார் அதனால் ஐந்தே நிமிடங்களில் சண்டையிட்டு முடித்ததாக கூறியுள்ளார் .
மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவில் ஒரு விழாவில் பேசுகையில், “அவர் (பிரதமர்) மிகவும் திமிர்பிடித்தவர். எங்கள் சொந்த விவசாயிகள் 500 பேர் இறந்துவிட்டார்கள் என்று நான் அவரிடம் சொன்னபோது, அவர்கள் எனக்காக இறந்தார்களா?” என்று கேட்டார்.
நீங்கள் தான் இந்த நாட்டின் தலைவர் அதனால் நீங்கள்தான் காரணம் என்றேன் அவ்வாறு பேசியதால் எங்களுடைய பேச்சு விவாதத்தில் முடிந்தது . பின்பு என்னை அமித் ஷாவை சந்திக்கச் சொன்னார். அதனால் நானும் அவரை சந்தித்தேன் . ஆனால் நாய் இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்க கடிதங்கள் அனுப்பினார் பிரதமர் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் பேசிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் “நான் அமித் ஷாவைச் சந்தித்தபோது, அவர் என்னிடம் ‘சத்யா, அவர் சுயநினைவை இழந்துவிட்டார் (he has lost his mind) , நீங்கள் கவலைப்படாமல் எங்களைச் சந்தித்துக் கொண்டே இருங்கள்’ என்று கூறியுள்ளார். மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் கருத்துப்படி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் மோடியைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது
மல்லிகார்ஜூன் கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் பிரச்சினையில் பிரதமர் ‘திமிர்பிடித்தவர்’ என்று மேகாலயாவின் ஆளுநர் ஸ்ரீ சத்ய பால் மாலிக் பதிவு செய்துள்ளார் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமரை ‘பைத்தியம்’ என்று அழைத்தார். அரசியலமைப்பு அதிகாரிகள் ஒருவரையொருவர் இவ்வளவு அவமதிப்புடன் பேசுகிறார்கள் நரேந்திரா. மோடிஜி இது உண்மையா? என்று பதிவிட்டுள்ளார்.
ஹரியானாவில் ஒரு விழாவில் மேலும் பேசியதாவது –
போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், விளைபொருட்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கவும் மோடி அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள் : 👇“விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதென மத்திய அரசு எண்ண வேண்டாம். தற்காலிகமாகதான் நிறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அநீதி நடந்தால், அப்போராட்டம் மீண்டும் தொடங்கும். விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறவும், விளைப்பொருட்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கவும் மோடி அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும். இது மத்திய அரசின் பொறுப்பு” என்று கூறியுள்ளார்.
தனது பதவியை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தப்பட்டதற்கு தான் பயப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், “நான் எப்போதும் விவசாயிகளுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, ஒன்றிய பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது அம்மாநிலத்தின் ஆளுநராக சத்யபால் மாலிக் பணியாற்றியுள்ளார்
இதையும் படியுங்கள் : 👇உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான சத்யபால் மாலிக், ஒன்றிய பாஜக அரசால் கோவா, பீகார், ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும், இப்போது மேகாலயாவிலும் ஆளுநராக பணிபுரிய நியமிக்கப்பட்டவர்.