விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நிறுத்திய இளைஞர்: கொலை முயற்சி வழக்கு பதிவு

Farmer Protest "Hero" Who Shut Water Cannon Charged With Attempt To Murder

0
212

அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த விவசாயி பெயர் நவ்தீப் சிங்(வயது 26). இவர் விவசாய சங்க தலைவர் ஜெய் சிங்கின் மகன் ஆவார்.

2015 ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, விவசாயியும், சமூக ஆர்வலருமான தனது தந்தை ஜெய் சிங்குடன் இணைந்து நவ்தீப் சிங் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி விவசாயிகள் நடத்தும் பேரணியை தடுக்க டெல்லி காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது. எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காவல்துறையினர் தடுத்துநிறுத்த முயன்றனர். அப்போது, காவல்துறையின் தடுப்புகளை எல்லாம் இடித்துத் தள்ளிவிட்டு, தனது டிராக்டரில் சென்று, தண்ணீர் டேங்கர் மீது ஏறி, மிக வேகமாக தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்த அந்த இயந்திரத்தை நிறுத்தினார்.

தில்லி நோக்கி விவசாயிகள் வந்து கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நவம்பர் 25 ஆம் தேதி நடந்துள்ளது. இதையடுத்து, நவ்தீப் மற்றும் பாரதிய விவசாய மாநில சங்கத் தலைவர் குர்நாம் சிங்மீதும் ஹரியாணா காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினரின் தடுப்புகளை இடித்துக் தள்ளிக் கொண்டு, காவலர் மீது டிராக்டரை விட்டு மோதச் செய்வது போல வந்ததால் நவ்தீப்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கலவரத்தை தூண்டியதாகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here