சென்னை சேப்பாக்கத்தில் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை மெரினாவில் நடத்தலாம் என தகவல் பரவியதை அடுத்து, அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜந்தர்மந்தரில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டம், தமிழக அரசு அளித்த உறுதியை ஏற்றுக்கொண்டு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தமிழக அரசு அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள், சென்னை சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் தங்களது போராட்டத்தினைத் தொடங்கியுள்ளனர். விவசாயிகள் தங்களது போராட்டத்தை மெரினாவில் நடத்தலாம் என தகவல் பரவியதை அடுத்து, அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :சூப்பர் ஸ்டார் படத்தில் மெகா ஸ்டார் இல்லவே இல்லையாம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்