விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி அவர்கள் மறைவுக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி அவர்களின் எதிர்பாராத மரணம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் சூழலில், அவர்களுக்காக சளைக்காமல் போராடும் மனத்துணிவு கொண்ட சிவசாமி அவர்கள் மரணமடைந்திருப்பது பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், விவசாயிகளின் நலனுக்காக சிவசாமி அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்