விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் செய்து தேசவிரோதியாக சித்தரிக்க முயல்கிறார்கள்: விளாசும் சிவசேனா

The Shiv Sena on Thursday asked Prime Minister Narendra Modi to honour the sentiments of protesting farmers and scrap new controversial farm laws, and said he will "grow bigger" in stature by doing so.

0
114

விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் செய்து, அவர்களை தேசவிரோதிகளாக மாற்ற  மத்திய அரசு முயல்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சிவசேனா கட்சியின்அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இன்று(வியாழக்கிழமை) வேளாண் போராட்டம் குறித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது:

விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று உச்ச நீதிமன்றம்  தலையிட்ட பின்பும் பிடிவாதமாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் பேச்சைக் கூட விவசாயிகள் மதிப்பதில்லை என்று இனிமேல் மத்திய அரசால் சொல்லக்கூடும்.

இப்போது கேள்வி உச்சநீதிமன்றத்தின் மரியாதை அல்ல, நாட்டின் வேளாண்கொள்கை பற்றித்தான் கேள்வி எழுப்பப்படுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்றுதான் விவசாயிகள் குரலாக இருக்கிறது. ஆனால், முடிவு எடுக்க வேண்டியது அரசின்கையில்தான் இருக்கிறது.

ஆனால், போராடும் விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று மத்திய அரசு அவர்களை அவமானப்படுத்துகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் விவசாயிகள் போராட்டத்துக்குள் நுழைந்தால், அதுகூட மத்திய அரசின் தோல்வியாகத்தான் இருக்கும்.

மத்திய அரசுக்கு, விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவர விருப்பம் இல்லை. அவர்கள் போராட்டத்தை தேசவிரோதமாக, தேசவிரோதிகளாக மற்றவண்ணம் பூச முயல்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தையும், அவர்களின் துணிச்சலையும், விடாப்பிடியாக போராடுவதையும், பிரதமர் மோடி வரவேற்க வேண்டும். வேளான் சட்டங்களைத் திரும்பப்பெற்று விவசாயிகளை பிரதமர் மோடி மதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எப்போதும்மோடி பெரிதாக மதிக்கப்படுவார்.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியில்தான் முடிகிறது. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்துவிட்டது. விவசாயிகள் சிங்கு எல்லையில் இருந்து வீடு திரும்பியவுடன், வேளாண்சட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மத்திய அரசு விலக்கி, விவசாயிகளை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவிடாத வகையில் தடுக்கும்.

விவசாயிகள் மனநிலை என்பது செய் அல்லது செத்துமடி என்ற ரீதியில் இருக்கிறது. போராடும் விவசாயிகளுடன் ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபடவேண்டும். உச்சநீதிமன்றத்தின் முடிவை ஒருவேளை விவசாயிகள் ஏற்காவிட்டால், லட்சக்கணக்கான விவசாயிகளை துரோகிகள் என மத்திய அரசு அழைக்குமா.

உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்கள்  குறித்து ஆலோசிக்க அமைத்துள்ள சமரசக்குழுவில் இடம் பெற்ற 4 உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள். இதன் காரணமாகத்தான் விவசாயிகள் அந்தக் குழுவை நிராகரிக்கிறார்கள்.

ஜனவரி 26 ஆம் தேதி குடியுரசுநாள் அன்று, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி டெல்லிக்குள் நுழையப்போகிறார்கள். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்தியாகம் செய்துவிட்டார்கள்.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here