‘விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்’: அமித்ஷா அறிவிப்பு

Farmers and opposition parties allege the laws will deprive the farmers of guaranteed minimum price for their produce.

0
137

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாபிலிருந்து ஹரியாணா வழியாக டெல்லி அடையும் விவசாயிகளின் பேரணியை கடந்த வியாழக்கிழமை பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தடுப்புகளை அமைத்தும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விவசாயிகளை கலைத்தனர். எனினும் காவல்துறையினரின் தடுப்புகளைமீறி விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

இதனிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியதைத் தொடர்ந்து டெல்லியில் நுழைவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

காவல்துறையினர் அளித்த தகவலின்படி புராரி திடலில் பாரதிய கிசான் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு தயாராக உள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். வேளாண் அமைச்சர் அவர்களை டிசம்பர் 3 ஆம் தேதி கலந்துரையாட உள்ளார் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “பல இடங்களில், இந்த குளிரில் விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மற்றும் ட்ரோலிகளுடன் நெடுஞ்சாலைகளில் தங்கியுள்ளனர். டெல்லி காவல்துறை உங்களை பெரிய மைதானத்திற்கு மாற்ற தயாராக உள்ளது என்று நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து அங்கு செல்லுங்கள். அங்கு நிகழ்ச்சிகளை நடத்த உங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “விவசாயிகளின் பிரச்னை மற்றும் தேவை குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது” என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here