விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான சம்பா பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடியை 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் 10 விவசாயிகளுக்கு இழப்பீடு தந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். முட்டுக்காட்டில் ரூ.8.80 கோடியில் மீன்வளர்ப்பு தொழில் நுட்ப தொழில்சார் கல்வி நிலைய கட்டடம் திறக்கப்பட்டது.

இதுபோன்று திருச்சி ஜீயபுரத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வளங்குன்றா நீர் உயிர் வளர்ப்பு மையம் கட்டத்தையும் திறந்து வைத்தார். மேலும் ஓசூர் கால்நடைப்பண்ணையில் ரூ.6.75 கோடியில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகமும் திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here