விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை ரூ.9,046 கோடி வழங்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

0
211

சுமார் 80 லட்சம் விவசாயிகளுக்கு 2018 காரிப் சீசனில் பயிர்க் காப்பீட்டுத் தொகை ரூ.9,046 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

தற்போது மத்திய அரசு 2 காப்பீட்டுத் திட்டங்களை வைத்துள்ளது. அவை, பிரதம மந்திரி ஃபஸல் பீமா யோஜனா மற்றும் மறுகட்டமைக்கப்பட்ட வானிலை அடிப்படை பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகும்.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதில் அளித்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மேற்கண்ட இரண்டு பயிர்க்காப்பீட்டு விவசாயத் திட்டத்தின் கீழ் 80 லட்சம் விவசாயிகளுக்கு ரூ9,046 கோடி காப்பீட்டுத் தொகை 2018ம் ஆண்டு காரிப் சீசனில் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இது தற்காலிகத் தரவுதான் என்றும் காரிப் 2018-ன் சில காப்பீட்டு கிளைம்கள் இன்னும் ரிப்போர்ட் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

பிரதம மந்திரி ஃபஸல் பீமா யோஜனா 2016 ஜனவரியில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் கீழ் விவசாயிகள் ஒரு குறைந்த அளவில் பிரிமியம் தொகை செலுத்தி  சேதத்திற்கான முழுக் காப்பீட்டையும் பெறுவர்.  இந்தத் திட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது.

பெருமளவு விளைச்சல் தரும் பம்பர் பயிர் ஆண்டை நிர்ணயித்து பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு தரும் திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த வேளாண் அமைச்சர்,  “இப்போதைக்கு இம்மாதிரி முன்மொழிவுகள் பரிசீலனையில் இல்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here