விவசாய கடன் தள்ளுபடி, வறட்சிக்கான நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் ஏழாவது நாளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தநிலையில், விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தினை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத்

தமிழகத்தில் நிலவும் வறட்சியினால் விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதையும் படியுங்கள் : வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன?: வீரமான பெண் பதிவின் முழு விவரம்

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்திக்கும்வரை டெல்லியில் தங்கியிருக்கவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : இளையராஜா, எஸ்.பி.பி. யார் சரி…?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்