விவசாயிகளின் நண்பரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மாட்டார், என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் பெத்தானியாபுரம் பகுதியில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஜிங் மாத்திரைகள் மற்றும் நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளின் நண்பரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மாட்டார் எனவும், காங்கிரஸ் கட்சி, தன் இருப்பை காட்டிக்கொள்ளவே போராட்டத்தை அறிவித்துள்ளதாகவும் விமர்சித்தார். கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார்.

சுகாதார பணிகள் மட்டுமல்லாது வாகனங்கள் மூலம் காய்கறிகளை மதுரை மாநகராட்சி வழங்கியுள்ளது என தெரிவித்த அவர், சென்னையில் கோயம்பேடு மாதிரி இல்லாமல் மதுரையில் நோய்த் தடுக்கப்பட்டதற்கு காரணம் மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கே காய்கறிகள் கொண்டு சென்றது தான் காரணம் எனக்கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here