விளைநிலங்களுக்கு கீழே தங்கம், வைரம் கிடைத்தாலும் விவசாயத்தை அழித்துவிடக் கூடாது. விவசாயத்தைக் காக்க மக்கள் நீதி மய்யம் போராடும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்துக்கு அருகே உள்ள மாநிலங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் விருதுகளை மட்டும் பெற்றுக்கொண்டு தமிழகம் முன்னேறிவிட்டதாகக் கூறுவதில் அர்த்தமில்லை. தமிழகத்தில் கல்வியைத் தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுக்கடைகளை எடுத்து நடத்தும் நிலையில்தான் அரசு உள்ளது.

தமிழகம் மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பளித்தால் தொழில்முனைவோருக்கு அந்த 30 சதவீத லாபமும் சேர்த்து கிடைத்துவிடும்.

ரௌத்திரம் பழகு என்பதைப் போல நாம் அரசியலையும் பழக வேண்டும். தெருவில் உள்ள பிரச்னைகளை நாமே முன்னின்று தீர்க்க வேண்டும். விளைநிலங்களுக்கு கீழே தங்கம், வைரம் கிடைத்தாலும் விவசாயத்தை அழித்துவிடக் கூடாது.

விவசாயத்தைக் காக்க மக்கள் நீதி மய்யம் போராடும்.
நம் நாட்டில் தங்க பிஸ்கட்டிற்கும், சாப்பிடும் பிஸ்கட்டிற்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி உள்ளது. எனவே வரி விதிப்பில் திருத்தம் தேவை.  மக்கள் நீதி மய்யத்திற்கு தொழில்முனைவோர்கள் ஆதரவளிக்க வேண்டும். நாட்டில் நடக்கும் பெரிய ஊழலைத் தடுக்க உங்களுடைய உதவி தேவை” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here