டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை உடலில் எழுதிக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : யார் இந்த ஜாமினி ராய்?

தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய நதிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : கேரளாவில் பசுமைக் காவல்நிலையம்: “போலீசாரின் கோபத்தைத் தணிக்கவும் செய்கிறது”

கடந்த 30 நாட்களில் விவசாயிகளில் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 30வது நாளான புதன்கிழமை (இன்று) தமிழக விவசாயிகள் தங்களது உடலில் ”விவசாயக் கடனை தள்ளுபடி செய்” என எழுதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : கிராம மக்களைக் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக 3 பேர் கைது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்