விழாக்கால விற்பனை : 1 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கும் அமேசான்

The new seasonal positions will help elevate its delivery experience and boost the company's fulfilment and delivery capabilities, Amazon India said.

0
151

வரும் விழாக்கால விற்பனைக்காக தற்காலிகமாக 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளதாக அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனைத் தளங்களில் விழாக்கால சிறப்பு விற்பனை தொடங்குகிறது.

இந்த காலகட்டங்களில் அமேசான், ஃபிளிப்காா்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளிக்கும். அப்போது அதற்கு ஏற்ப விற்பனையும் அதிகரிக்கும். இதனால், தற்காலிகமாக ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது வழக்கம்.

சிறப்பு விற்பனைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கான சேவையில் குறை இருக்கக்கூடாது என்ற காரணத்துக்காக பணியாளர்களை அதிகப்படுத்தியுள்ளனர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள். ஆர்டர் எடுக்கும் நிலையங்கள்,வரிசைப்படுத்தல் மையங்கள், டெலிவரி மையங்கள், துணை நெட்வொர்க் பணிகள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என அத்தனைப் பிரிவுகளின் கீழ் தற்காலிக வேலைவாய்ப்பு அளித்துள்ளது அமேசான்.

இதற்காக பொருள் விநியோகம் உள்பட பல்வேறு பிரிவுகளில் தற்காலிகமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை பணியமா்த்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதபாத், பூனே ஆகிய நகரங்களில் சிறப்பு மையங்களை அமைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் சேவை மையம் தொடர்புக்கு ஈமெயில், போன் அழைப்புகள், சமூக வலைதளம், சாட்டிங் என எந்தத் தளம் மூலமாகவும் சந்தேகங்களையும் புகார்களையும் தெரிவிக்க முடியும்.

தொலைபேசி அழைப்புகள் மூலம் சேவை மையத்தை அழைக்க தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பேசலாம். இதற்கான தற்காலிகப் பணியாளர்கள் நியமனமும் நடைபெற்றுள்ளது.

750 நகரங்களில்1,400 டெலிவரி குடோன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சகல விதமான பொருட்களையும் கையாள்வது முதல் அனைத்து விதமான பயிற்சிகளும் தற்காலிகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக 
அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here